News April 24, 2025

பில்லி, சூனியம் நீக்கும் மார்க்கபந்தீஸ்வரர்

image

வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரத்தில் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயரும் உண்டு. எனவே தான் இந்த ஆலயம் ‘விரிஞ்சிபுரம்’ என்றானது. கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இங்கு உள்ள தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.

Similar News

News April 25, 2025

இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News April 24, 2025

வேலூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் மே 2-ந் தேதி காட்பாடி விளையாட்டு அரங்கில் மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெறுகிறது. 16 முதல் 25 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம். மேலாளர் கட்டாயம் தேவை. வயது சான்றிதழும், கல்வி நிறுவன சான்றிதழும் தேவை. போட்டி போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.

News April 24, 2025

வேலூரில் நாளை விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை ஏப்ரல் 25-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!