News March 31, 2025
பிறை தென்பட்டது : நாளை ரமலான் பண்டிகையை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட மசூதி.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ஊராட்சியில் நாளை ரம்ஜான் பண்டிகைக்காக மசூதி மிகவும் அழகாக அலங்கரிக்க பட்டுள்ளதை படத்தில் காணலாம். பிறை தென்பட்டதை அடுத்து நாளை மார்ச் 31 தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
Similar News
News April 3, 2025
கிருஷ்ணகிரி: ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தம்பதியரில் ஒருவர் SC/ST போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். https://ambedkarfoundation .nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்
News April 3, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு நேர ரோந்து பணி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 03.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
News April 3, 2025
ஸ்ரீ பார்ஷ்வ பத்மாவதி சக்திபீட தீர்த்தம்

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது ஸ்ரீ பர்ஷ்வ பத்மாவதி சக்திபீட தீர்த்த தாம். 24 தீர்த்தங்கரர்களை கொண்ட இக்கோயில் பத்மாவதி தேவியுடன் தொடர்புடைய முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாகும். இந்த கோயில் வளாகம், கட்டிடக்கலை அழகு நம் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும். மேலும் இங்குள்ள அமைதியான சூழலில் நாம் தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். ஷேர் பண்ணுங்க