News August 14, 2024
பிரெஞ்சு நாடுகளின் பாராளுமன்ற கூட்டமைப்பில் புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை பிரெஞ்சு நாடுகளின் பாராளுமன்ற கூட்டமைப்பில் சேர்ந்துள்ளது. இதனை சட்டப்பேரவை தலைவர் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். பிரெஞ்சு மொழி பேசும் 56 நாடுகளில் பாராளுமன்றங்கள் இந்த அமைப்பில் உள்ளன. பிரெஞ்சு மொழி பேசும் நாடுகள் நமது புதுச்சேரி நட்புறவை பேணிக்காக்கவும்,கல்வி, சுற்றுலா, கலாச்சார பரிவர்த்தனைகளுக்கு மிகவும் உபயோகமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
புதுச்சேரி: CBI விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை

புதுச்சேரி, போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில் CBI மற்றும் NIA விசாரணைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டு இருப்பதாலும், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்ற காரணத்தினாலும், இது தொடர்பான விசாரணையை CBI மற்றும் NIA அமைப்புகள் மேற்கொள்ள, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார்.

புதுச்சேரி: ரூ.6.15 கோடி மதிப்பில் பணிகள்

புதுச்சேரி, வில்லியனூர் தொகுதியில் ரூ.6.15 கோடி மதிப்பிலான ‘யு’ வாய்க்கால் மற்றும் இணைப்புச் சாலை பணிகளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா நேற்று (டிச.22) தொடங்கி பூமி பூஜை செய்து வைத்தார். பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி, அரும்பார்த்தபுரம் மேம்பாலம் அருகே நடைபெற்றது.