News April 5, 2025
பிரியாணி, ஷவர்மாவால் பாதிப்பு: மக்கள் அச்சம்

சென்னையில், கடந்த சில நாட்களாக ஹோட்டல்களில் சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி பிலால் ஹோட்டல், நேற்று சிந்தாதிரிப்பேட்டை ஷவர்மா கடை என அடுத்தடுத்த கடைகளில் சுகாதாரம் இல்லாமல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால், ஹோட்டல்களில் சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்

சென்னையில், பேருந்து நிலையங்கள், சாலையோர ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350719>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
News August 9, 2025
19 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை – கும்மிப்பூண்டி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (ஆகஸ்ட் 9) மற்றும் 11 ஆகிய தேதிகளில் 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்ளுங்கள். செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி – தாம்பரம் பகுதி நேரமாக ரத்து செய்ப்பட்டுள்ளது.