News November 24, 2024
பிரியங்கா காந்திக்கு மயிலாடுதுறை எம்பி வாழ்த்து

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா ‘வயநாடு சரியான முடிவை எடுத்திருப்பதாக’ முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வயநாட்டிற்காகவும், இந்தியாவிற்காகவும் உங்களின் குரல் ஒலிக்கட்டும் என பிரியங்கா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 124.80 மிமீ மழை பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில், அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 40.20 மிமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 34.80, மயிலாடுதுறையில் 7மிமீ, மணல்மேட்டில் 28 மிமீ, செம்பனார்கோவிலில் 12 மிமீ என மொத்தம் 124.80 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 22, 2025
மயிலாடுதுறை: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம், வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது நிறை, குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News November 22, 2025
மயிலாடுதுறை: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

மயிலாடுதுறை மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <


