News August 4, 2024

பிரபல ரவுடி சீஸிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்கு

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான சீசிங் ராஜாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆந்திராவில் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் காரில் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, வேளச்சேரியில் பார் நடத்தும் ஆனந்தனை மிரட்டி பணம் கேட்டதாக சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் நேற்று (ஆகஸ்ட் 3) மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.

Similar News

News August 9, 2025

சென்னையில் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்சனை

image

சென்னை தி.நகர் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி உள்ள மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறுகின்றனர்.

News August 9, 2025

சென்னையில் 15% சாலை விபத்துகள் குறைவு

image

சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சாலை விபத்துகள் 15 சதவீதம் ஆக தடுக்கப்பட்டுள்ளன என சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னை சாலைகளில் 169 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்றும், இதனால் குற்றங்கள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

News August 9, 2025

சென்னை: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

image

சென்னை இளைஞர்களே, IT துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை தமிழக அரசு இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, J2EE, Web Designing, Testing என பல்வேறு Course-கள் உள்ளன. இதற்கான வகுப்புகள் சென்னையில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். நல்ல சம்பளத்தில் வேலை வேண்டும் நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!