News April 26, 2025

பிரபல மூன்று ரவுடிகளுக்கு சென்னைக்குள் வர தடை

image

ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ராக்கெட் ராஜா, நெற்குன்றம் சூர்யா, லெனின் ஆகிய மூன்று ரவுடிகளும் சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு வர சென்னை காவல் ஆணையரகம் தடை விதித்துள்ளது. நீதிமன்ற வழக்கு மற்றும் காவல் நிலைய விசாரணை தவிர்த்து ஏனைய பிற காரணங்களுக்காகவும் சென்னை எல்லைக்குள் மேற்கண்ட 3 ரவுடிகளும் வருவதற்கு சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது.

Similar News

News October 15, 2025

பல தவறான தகவல்களை தரும் CM: நயினார் நாகேந்திரன்

image

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், கரூரில் நடந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் சட்டமன்றத்தில் ஒரு விளக்கம் கொடுத்தார். அதில் பல தவறுகள் இருந்தன. தவெக தலைவர் விஜய் பத்து ரூபாய் பாட்டில் என்ற பாடும் போது, செருப்பை தூக்கி வீசுகிறார்கள். கரண்ட் போகிறது. லத்தி சார்ஜ் நடக்கிறது. இதை முதலமைச்சர் மறுக்கிறார் என்றார்.

News October 15, 2025

35 பேர் தப்பி ஓட்டம்

image

மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மையத்தில் இருந்த 35 பேர் திடீரென ஒன்று கூடி காவலாளியை தாக்கி விட்டு போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பி சென்றனர்.

News October 15, 2025

சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 17, 18 ஆகிய தேதிகளில் இரவு 11:35 மணிக்கு கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில் செல்கிறது. தாம்பரத்தில் இருந்து வரும் 16, 18 ஆகிய தேதிகளில் இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பிற்பகல் 1:25 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!