News April 2, 2025
பிரபலமான காளை உயிரிழப்பு

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற எருது விடும் விழாக்களில் கலந்து கொண்டு, பல பரிசுகளை குவித்த பிரபலமான ‘வாணியம்பாடி சூப்பர் ஸ்டார்’ என்ற காளை உடல் நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தது. இதன் காரணமாக, வேலூர் மாவட்ட எருதுவிடும் திருவிழா உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அந்த காளைக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 29, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (அக்.29) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News October 29, 2025
வேலூர்: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News October 29, 2025
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை (அக்.30) மதியம் 01.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கேட்டுக்கொண்டார்.


