News December 4, 2024
பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற திங்கள் (9.12. 2024) தேதி காலை 9:00 மணி முதல் 4:00 மணி வரை தென்காசி அரசு தொழில் பயிற்சி நிலையம் நடைபெற உள்ளது. முகாமில் ஐடிஐ 2 ஆண்டு மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
தென்காசியில் 35 கிராம் தங்கசெயின் பறித்தவர் கைது

தென்காசி, பாவூர்சத்திரம் ரயில் நிலையம் 1வது நடைமேடையில் நடந்து சென்ற பாவூர்சத்திரம் தெற்கு காந்தி நகரை சேர்ந்த ரத்தினசாமி மனைவி தனபாக்கியம் என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 35 கிராம் தங்கச் முறுக்கு செயினை பறித்து சென்றனர். செயின் பறித்து தலைமறைவாக இருந்த பாவூர்சத்திரம் சின்னத்தம்பி நாடார் பட்டியை சேர்ந்த சிவா என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்து தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.
News January 9, 2026
தென்காசி மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க தென்காசி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புகையில்லா போகி கொண்டாடுவோம் சுற்றுச் சூழலை பேணிக் காப்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.