News October 11, 2024
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை
பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற இணையதளத்தில் அக்.15க்குள் விண்ணப்பிககுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும், (http://scholarships.gov.in) சந்தேகமேதும் இருப்பின் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
ரேஷன் கடை வேலைவாய்ப்பு: நேர்முகத் தேர்வு அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 31 விற்பனையாளர் பணிகளுக்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத்தேர்வு நவம்பர் 25ஆம் தேதி துவங்கி, நவம்பர் 29 வரை பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மேலும் நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்யவும்
News November 19, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TAMCO) மூலமாக வழங்கப்பட்டு வரும் பல்வேறு கடன் மற்றும் கல்வி கடன் திட்டங்களுக்கு ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் தகுதி உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நவம்பர் 19-ஆம் தேதியான இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
தனியார் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர்
சென்னை அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய “புத்துளிர் 2024” மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற பெரம்பலூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆசிரியர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.