News April 4, 2025
பிரதமா் பயிா் காப்பீடு திட்டம், புதுவை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் விவசாயிகள், தற்போது சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடியை பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பயன் பெறலாம். நடப்பாண்டில் பயிா் செய்த விவசாயிகள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுறை அறிவிப்பு

புதுச்சேரியில், தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று புதுவை மற்றும் காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாளை (நவ.18) காரைக்காலில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியாவிற்கு ஆன்மிகப் பயணம் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 42 இந்தியர்கள், பேருந்து விபத்தில் உயிரிழந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.