News May 7, 2025
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், வாலிபர் கைது

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு மூலம் நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, மிரட்டல் விடுத்த ராமநாயக்கன் குளம் தெருவை சேர்ந்த கணேஷ்குமார்(33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
Similar News
News March 8, 2026
நாகை: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2 .அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
7. பெண்கள் பாதுகாப்பு – 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 8, 2026
நாகை: திமுகவில் இணைந்த அதிமுக-வினர்

நாகை மாவட்டம், குறிச்சி ஊராட்சி ஆய்மலை கிராமத்தில் அதிமுக முன்னாள் கிளைக் செயலாளர் பிரசாத் தலைமையில், அக்கட்சியில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் விலகி திமுக ஒன்றிய செயலாளர் வடவூர் க.ராஜேந்திரன் தலைமையில் திமுக-வில் நேற்று இணைந்தனர். இதையடுத்து புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!
News March 8, 2026
நாகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 2025-26-ம் ஆண்டு சம்பா பருவத்தில் மாவட்டம் முழுவதும் 170 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் இதுவரை 81 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 24 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.187 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவிந்து உள்ளார். SHARE


