News May 7, 2025
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், வாலிபர் கைது

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு மூலம் நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, மிரட்டல் விடுத்த ராமநாயக்கன் குளம் தெருவை சேர்ந்த கணேஷ்குமார்(33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
Similar News
News November 12, 2025
நாகை: ஆட்சியர் அலுவலகத்தில் புத்தாக்கப் பயிறசி

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், புத்தாக்கப் பயிற்சி இன்று (12.11.2025) காலை 10 மணி அளவில் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் தொடர்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
நாகை: தேர்தல் தேதி அறிவிப்பு – கலெக்டர்

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நாகை மாவட்ட கிளைத் தேர்தல் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ் வெளியிட்ட அறிக்கையில், நாகை மாவட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவு வரும் நவம்பர் 24-ஆம் தேதி நாகப்பட்டினம் முதன்மை நிலையத்தில் நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
நாகை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

நாகை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<


