News August 9, 2024
பிரதமருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள்

நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேசியக் கொடியை மதிக்கக் கூடிய நாகரிகத்தை இந்த நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் பெற்றிருக்கின்றோம்; நான் பிரதமருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்; சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஆர் எஸ் எஸ் அனைத்து அலுவலகங்களிலும் ஏற்றுவதற்கு பிரதமர் வலியுறுத்த வேண்டும்; அவர் இதை செய்வாரா? என நான் கேட்கின்றேன்” என்றார்
Similar News
News January 3, 2026
குமரி: குளத்தில் மிதந்த ஆண் சடலம்…

காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (70). இவர் கடந்த 31-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் வேலைக்கு சென்று இருக்கலாம் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைத்த நிலையில் நேற்று (ஜன.2) அவரது உடல் அந்தப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மிதந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 3, 2026
குமரி: அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி விபரீத முடிவு!

மார்த்தாண்டம் அருகே இலவுவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (60). இவரது அண்ணன் இறந்துவிட்டதால் மன வேதனையில் பால்ராஜ் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் நேற்று (ஜன.2) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 3, 2026
குமரி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு!

குமரி மாவட்ட மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களை பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


