News April 25, 2025
பின்னவாசல்: குளத்தில் மூழ்கி மாணவன் பலி

திருவாரூர் மாவட்டம், பின்னவாசல் அருகே பிச்சைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் சத்தியசாய் பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று தனது நண்பர்களுடன் அருகில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்ற சத்தியசாய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவனின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 13, 2025
திருவாரூர்: இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

கூத்தாநல்லூர் அருகே உள்ள பெரியகுருவாடி, ஜீவா தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (49). இவர் தனது பைக்கில் குலமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற 27 வயது மதிக்கத்தக்க மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவருக்கு, ரவிச்சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்துள்ளனர்.
News November 13, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 12, 2025
திருவாரூர்: விவசாயிகள் வங்கி கணக்கில் 704 கோடி ரூபாய்

திருவாரூர் மாவட்டம், குறுவை நெல் சாகுபடியில் இதுவரை தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 258573 மெட்ரிக் டன் நெல் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் வங்கி கணக்கு நேரடியாக 704 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு 37 ஆயிரத்து 956 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக, மாவட்ட ஆட்சியரகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


