News March 23, 2025

பிஎம் கிசான் நிதியுதவிக்கு மார்ச் 31க்குள் பதிவு செய்ய வேண்டும்

image

பிஎம் கிசான் நிதியுதவியை பெற விவசாயிகள் மார்ச் 31க்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 41,973 பயனாளிகளில் 16,250 பேர் மட்டும் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் ஆவணங்களுடன் அரசு அலுவலர்கள், பொதுசேவை மையங்களை அணுக வேண்டும். ஏப்ரல் மாதம் வழங்கப்படும் 20ஆவது தவணை நிதியை பெற, விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Similar News

News March 29, 2025

மத்திய அரசில் வேலை வாய்ப்பு

image

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர், இளநிலை சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி 10th ,12th தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். ரூ.25,500 – 81.100 வரை சம்பளம் , விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 24குள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யவும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 29, 2025

வாட்டிவதைக்கும் வெயில்: அச்சத்தில் மக்கள்

image

கோடைகாலம் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர், திருத்தணி போன்ற இடங்களில் வெயில் 100 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. மார்ச் மாதமே முடியாத நிலையில் 100 டிகிரி செல்சியஸ் பதிவானதால் வருகின்ற நாட்கள் இன்னும் அதிகமாக வெப்பம் பதிவாக கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளார்.

News March 28, 2025

வேண்டிய வரம் அருளும் பெரியபாளையம் பவானி அம்மன்

image

ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!