News April 25, 2025

பாலியல் வன்கொமைக்கு ஆளான மாணவி உயிரிழப்பு

image

வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்ததாக உதவிய பேராசிரியர் ராஜேஷ்குமார் (45) சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கருக்கலைப்பின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்குச் சென்ற கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Similar News

News November 9, 2025

தேசிய பாதுகாப்பு படை அதிகாரியின் கார் எரிந்து நாசம்

image

தாம்பரம் அருகே நெடுங்குன்றத்தில், என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு குரூப் கமாண்டராக பணிபுரிந்து வருபவர், அங்குஷ் ஷர்மா. இவருக்கு சொந்தமான கார், இந்த மையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை, 3:30 மணிக்கு, இந்த கார் தீ பிடித்து எரிந்தது. பணியில் இருந்த ஊழியர்கள் தீ அணைத்தனர். இது குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 8, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவு பணி காவல் அலுவலர்களின் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக இரவு பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது அவசரத் தேவை உள்ள நேரங்களில் மேற்கண்ட பட்டியலில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2025

செங்கல்பட்டு பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள்<> இங்கு க்ளிக் <<>>செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!