News October 23, 2024
பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான கிஷோர் (26), ரித்தீஷ் (21), வெங்கட் ஆகியோர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பழகி ஆசை வார்த்தைக்குறி பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். இதுகுறித்து, சிறுமி தனது தாயிடம் தெரிவிக்க, தாய் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News December 2, 2025
காஞ்சி: பிறப்பு சான்றிதழ் இல்லையா? CLICK HERE

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பள்ளியில் சேர, அரசாங்க வேலையில் பணியமர, பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே <
News December 2, 2025
ஏவுகணை கிராமத்தில் கூரை சரிந்து பசுங்கன்று உயிரிழந்தது.

ஒழுகரை கிராமம் பழைய ரேஷன் கடை தெருவில் வசித்து வரும் விவசாயியான வையாபுரி மகன் கணேசன் இவர் கால்நடை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அவர் வீட்டு பின்புறம் அமைக்கப்பட்டு இருந்த சிமென்ட் சீட் கூரை திடீரென சரிந்து விழுந்த போது அங்கு கட்டப்பட்டிருந்த பசு கன்று மேல் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பசு கன்று உயிரிழந்தது. இதனால் விவசாய குடும்பம் சோகத்தில் ஆழ்ந்தது.
News December 2, 2025
வாலாஜாபாத் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்ற நபர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ராஜ வீதியில் உள்ள நூர்ஜகான் ஸ்டோரில் அரசால் தடை செய்யப்பட்ட கொடு்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு முகமதியர் தெருவை சேர்ந்த ஆதம்பா பாட்ஷா இன்று (டிச.01) வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1616 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


