News February 18, 2025
பாலியல் புகார் உதவி தலைமை ஆசிரியர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவி தலைமை ஆசிரியர் மீது பள்ளி மாணவிகள் 7 பேர் பாலியல் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிமளம் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் சைல்டுலைன் எண்ணைத் தொடர்பு கொண்டு பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற போலீசார், உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை கைது செய்து போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
Similar News
News November 25, 2025
புதுகை: மழையால் இடிந்து விழுந்த 6 வீடுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அவ்வகையில், கறம்பகுடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெய்த மழையால் வெள்ளம் சூழந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை கால்வாய் தண்ணீர் முழுகடித்து, ஊருக்குள் நீர் புகுந்தது. இதில், சக்திவேல் என்பவரின் வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. மேலும் அதே பகுதியில் 5 வீடுகளின் சுவருகள் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டன.
News November 25, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 24, 2025
பொன்னமராவதி: சோழீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேக விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் கார்த்திகை திங்கள் சோம வாரத்தை முன்னிட்டு, இன்று 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக சிவாச்சாரியர்கள் வழிநடத்த சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று, பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட 108 சங்குகளில் உள்ள புனிதநீர் மூலம் சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.


