News May 7, 2025
பாலியல் புகாரில் பேராசிரியர் மீது வழக்கு பதிவு

நெல்லை மாவட்டம் அபிஷேக பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக துணைவேந்தரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதனை விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்பட்டது. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பேராசிரியர் கண்ணன் மீது நெல்லை காவல் நிலையத்தில் இரு பிரிவின் கீழ் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Similar News
News December 30, 2025
நெல்லை: மனைவி பிரிந்ததால் கணவர் விபரீத முடிவு!

நெல்லை அருகே பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (36). இவருக்கு மதுபழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கருத்து வேற்பாடு காரணமாக இவரது மனைவி ஒரு வாரத்திற்கு முன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த சந்தானம் நேற்று மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேட்டை போலீசார் விராசனை நடத்தி வருகின்றனர்.
News December 30, 2025
நெல்லை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY NOW!

நெல்லை மக்களே, இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு கிளிக் செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 30, 2025
நெல்லை: மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய கணவர்!

நெல்லை, நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பெருமாள் செல்வம் – பால்கனி (32). இவர்கள் கடந்த ஒரு மாதமாக தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு பெருமாள் தனது தம்பியுடன் மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பெருமாள் கிரிக்கெட் மட்டையால் பால்கனி தலையில் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த பால்கனி பாளை GHல் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸார் விசாரனை.


