News March 15, 2025

பாலியல் குற்றாவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

image

ஆண்டிபட்டி அருகே கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (53). என்பவர் 2023.ல் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்து ராஜதானி போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (மார்.14) பரமசிவத்திற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

Similar News

News April 21, 2025

தனியார் பஸ்-வேன் மோதல்; வேன் டிரைவர் பலி

image

மதுரையில் இருந்து தேனிக்கு தனியார் பஸ் சென்றது. நேற்று மதியம் ஆண்டிப்பட்டி அருகே SSபுரம் சென்றபோது சிமென்ட் மூடைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் மீது பஸ் மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கி பஸ்சின் அடிப் பகுதியில் சிக்கியது.இடிபாடுகளுக்குள் சிக்கிய வேன் டிரைவர் ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்த முத்துலிங்கம் 45, சம்பவ இடத்திலேயே பலியானார்.10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 21, 2025

வீரபாண்டி மாரியம்மன் அம்மனுக்கு சிறப்பு பூஜை

image

வீரபாண்டி ஸ்ரீ மாரியம்மன், 5ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பான கரங்கள் நடைபெற்றன. இதில் வீரபாண்டி பொது மக்களுக்கு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த பூஜைக்கான ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் செய்திருந்தார்.

News April 21, 2025

வடுகபட்டியில் படித்த முன்னாள் மாணவர்களுடன் சாப்பிட்ட கவிஞர்

image

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 70 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டார். அப்போது 70,ஆண்டுகள் முன் சேர்ந்து படித்த மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துள்ளனர்

error: Content is protected !!