News March 12, 2026
பாலியல் குற்றவாளிகளை திமுக காக்கிறதா? EPS

தூத்துக்குடியில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக EPS கூறியுள்ளார். சிறுமியை காணவில்லை என புகாரளித்தும் போலீஸ் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாக கூறிய அவர், குற்றவாளிகளை உடனே கண்டறிந்தால் உறவினர்கள் போராட்டத்தை முடித்துவிடப் போகின்றனர் என்றார். மேலும், உறவினர்களுடன் திமுக MLA ஏன் சமாதானம் பேசவேண்டும் எனவும் குற்றவாளிகளை காக்க திமுக முயல்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News April 13, 2026
ராமதாஸிடம் நலம் விசாரித்த CM ஸ்டாலின்

சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸிடம் CM ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். சேலத்தில் நேற்று பரப்புரை மேற்கொண்ட ராமதாஸ், <<19633648>>திடீரென மயங்கி விழுந்தார்<<>>. உடனே அங்குள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், ராமதாஸிடம் போனில் பேசிய ஸ்டாலின், உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். விரைவில் அவர் டிஸ்சார்ஜாக இருப்பதாக கூறப்படுகிறது.
News April 13, 2026
தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு

தலித் அறிவுசார் குழுமம் அமைப்பு உள்பட பட்டியலின சமூக செயற்பாட்டாளர்கள் பலர் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் மரிய லாரன்ஸ் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் EPS-ஐ நேரில் சந்தித்தனர். அப்போது, அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்த பிறகு பட்டியலின மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என EPS உறுதியளித்துள்ளார்.
News April 13, 2026
திருமாவை அவமதிப்பதா? அன்புமணி சாடல்

கூட்டணி கட்சியின் தலைவரை மதிக்காத பிரேமலதா மக்களை மதிப்பாரா என விருத்தாச்சல பிரசாரத்தில் அன்புமணி கேட்டுள்ளார். கடந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திருமாவுடன் சேர்ந்து போராடியதாக கூறிய அவர், திமுக என்ற சதிகாரன் இடையில் வந்து எங்களை பிரித்துவிட்டான் என சாடியுள்ளார். அப்படிப்பட்ட திருமாவை பிரேமலதா <<19613152>>அவமதித்துவிட்டதாக<<>> அவர் விமர்சித்துள்ளார். ஆனால் திருமாவை அவமதிக்கவில்லை என பிரேமலதா விளக்கம் கொடுத்துவிட்டார்.


