News January 2, 2025
பாலிபேக் நிறுவனத்திற்கு ரூ.25000 அபராதம்

சிவகாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.அப்போது பள்ளப்பட்டி சாலையில் இயங்கி வரும் பாலிபேக் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி மாநகராட்சி உரிமம் இல்லாமல் அந்த நிறுவனம் செயல்பட்டு வந்ததும் தெரியவந்ததால், அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர்.
Similar News
News December 2, 2025
விருதுநகர் அருகே வழுக்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் முனியசாமி(25). இவர் அருகே உள்ள கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று டிச.1 முனியசாமி கடையை கழுவி கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து காயம் அடைந்து மயங்கினார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முனியசாமி உயிரிழந்தார். டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
விருதுநகர்: 10th, 12th தகுதி.. மத்திய அரசு வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் <
News December 2, 2025
சிவகாசி அருகே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை

சிவகாசி பள்ளபட்டி ரோடு முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் பூ வியாபாரி ஜெயச்சந்திரன் 57. டிபி நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு மது அருந்தும் பழக்கமும் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் சரியாகவில்லை. இவர் வீட்டில் பிளேடால் தனது கழுத்தில், கையில் அறுத்துக் கொண்டார். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


