News January 22, 2025
பாலினத்தை கண்டறிந்து கூறிய வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி வ.உ.சி நகர் பகுதியில் உள்ள வீட்டில், கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் இயந்திரம் மூலமாக சிசுவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த ரஞ்சித் குமார் என்பவரை போலீசார் நேற்று (ஜன.21) கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு ஸ்கேன் இயந்திரங்கள், கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 10, 2025
கள்ளக்குறிச்சி -இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இன்று இரவு முதல் காலை வரை ரோந்து பணியை கவனிக்கும் பொறுப்பில் புதிய போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முத்துமணி இயக்கத்தில், 1வது பாகம் & 2வது பாகம் என இரண்டு பிரிவுகளில் ரோந்து குழுக்கள் செயல்பட உள்ளன.பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

News December 9, 2025
சமூக நீதி விருந்துக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் பிரசாந்த் அழைப்பு

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான பெரியார் விருது’ கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான சமூக நீதி விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இந்த விண்ணப்பம், வருகின்ற டிச.18-ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களின் சாதனைகளை அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.