News January 23, 2025

பாலாபுரம் கிராமத்தில் கலெக்டர் ஆய்வு

image

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள பாலாபுரம் கிராமத்தில், கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளை, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்; திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று (ஜன.22) நேரடியாக சென்று பார்வையிட்டு வீடுகள் தரமாக உள்ளதா? பாதுகாப்பாக உள்ளதா? என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயக்குமார், பயிற்சி கலெக்டர் உடன் இருந்தனர்.

Similar News

News November 28, 2025

திருவள்ளூர்: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை!

image

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 43 வயதுள்ள ரயில்வே ஊழியருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இதனால், மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், 7ஆம் வகுப்பு படிக்கும் தனது சொந்த மகளுக்கே அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். அவருக்கு 17 ஆண்டுகள் சிறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு நிவாரணம் வழங்க திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் பரிந்துரைத்தது.

News November 28, 2025

திருவள்ளூர்: பல லட்ச ரூபாய் பண மோசடி!

image

திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டி உரிமையாளரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் பார்வதி, அவரது கணவர் மீது நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பார்வதி தலைமறைவான நிலையில், அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது பெங்களூருவில் செல்போன் சிக்னல் காட்டியதால் தனிப்படை அங்கு விரைந்தது. ஆனால், இது திசை திருப்பும் வேலையாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

News November 28, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று நவ.27 இரவு ரோந்து முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!