News February 18, 2025
பாலத்திலிருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு

திண்டிவனம் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (29) சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.சொந்த ஊருக்கு வந்திருந்த இவா், நேற்று முன்தினம் மது போதையில் திண்டிவனத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகேயுள்ள வாய்க்கால் பாலத்தின் தடுப்புக் கட்டை மீது அமர்ந்திருந்த போது தவறி விழுந்ததில் பாலாஜிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தாா். திண்டிவனம் போலீஸாா் விசாரணை நடத்திற் வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
விழுப்புரம்: லாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது!

திருவெண்ணெய்நல்லூர், பெண்ணைவலம் அங்காளம்மன் கோயில் தெருவில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராஜவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும் கைப்பற்றினர்.

விழுப்புரம்: மனைவி பிரிந்து சென்றதால் நடந்த சோகம்!

விக்கிரவாண்டி, பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்று விட்டார். இதனால் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலம் பாதித்திருந்த சசிக்குமார் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டி உழவர் சந்தை அருகே மயங்கி விழுந்து காயமடைந்தார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.