News March 28, 2024
பாலக்கோடு அருகே வைக்கோலுடன் எரிந்த லாரி!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், கோவிலூர் என்ற இடத்தில் நேற்று(மார்ச் 27) வைக்கோல் பாரம் ஏற்றி வந்த ஈச்சர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News March 12, 2026
தருமபுரி மக்களே சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News March 12, 2026
தருமபுரி மக்களே ரூ.5000 வேண்டுமா!

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கு
News March 12, 2026
தருமபுரி அருகே கிணற்றில் வாலிபர் சடலம்!

மாரண்டஅள்ளி அருகே அமானி மல்லாபுரம் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 28) கடந்த 6-ந் தேதி திடீரென மாயமானார். இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அமானி மல்லாபுரம் செல்லும் சாலை அண்ணாமலை என்பவரின் விவசாய நில கிணற்றில் ரஞ்சித் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாரண்டஅள்ளி தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


