News March 28, 2024
பாலக்கோடு அருகே வைக்கோலுடன் எரிந்த லாரி!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், கோவிலூர் என்ற இடத்தில் நேற்று(மார்ச் 27) வைக்கோல் பாரம் ஏற்றி வந்த ஈச்சர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 21, 2025
தர்மபுரி: ரூ.300க்கு கொலை ; குற்றவாளிக்கு ஆயுள் !

தர்மபுரி: சோமனஅள்ளி, மல்லாபுரம் பகுதி சிக்கன் கடையில் கடந்த 2021ஆம் ஆண்டு 300 ரூபாயை காணவில்லை என்பதால் அங்கிருந்த சுந்தரம் அண்ணாதுரையின் இடது பக்க விலாவில் குத்திவிட்டார். இதில் அண்ணாதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் சுந்தரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மோனிகா( நவ.21) ஆயுள் தண்டணை மற்றும் ரூபாய் 5000-/- அபராதம் விதித்தனர்.
News November 21, 2025
தர்மபுரி: பிஸ்னஸ் செய்ய அரிய வாய்ப்பு!

தருமபுரி இன்டஸ்ட்ரியல் ஸ்டார்ட் அப் எக்ஸ்போ – 2025 திருவிழா புதிய கலெக்டர் ஆபீஸ் அதியமான் மஹாலில் நவம்பர் 21, நவம்பர் 22, இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் சமூக ஆர்வலர்கள், தொழில் முனைவோர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
News November 21, 2025
தர்மபுரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

தர்மபுரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <


