News January 3, 2025

பாலக்கோடு அடுத்த சின்னாறு அணையிலிருந்து நீர் திறப்பு

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம் சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024-25 ஆம் (பசலி 1434) ஆண்டிற்கு விவசாய நிலம் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் இன்று (ஜன 3)  விவசாயிகள் பாசனம் பெறும் வகையில் காலை 9.30 மணி தண்ணீர் திறந்து வைக்க உள்ளனர்.

Similar News

News October 31, 2025

தருமபுரி: பெண்கள் கவனத்திற்கு!!

image

தருமபுரி மாவட்டத்தில், மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் (DHEW) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல் பொருட்டு கீழ்க்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விபரங்களை நவ.15-ம் தேதி மாலை 5 மணிக்கு, மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அனுப்பி வைக்க கலெக்டர் தெரிவித்தார்.

News October 31, 2025

தருமபுரி: மின்னனு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு

image

தருமபுரி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நாகாவதி நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு மீன்பிடி குத்தகைக்கு விட மின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் ஆணையர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வரவேற்கப்படுகின்றன. விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் பார்வையிடவும். மேலும், தொலைபேசி: 04342-232311 தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சதிஸ் தகவல்.

News October 31, 2025

தருமபுரியில் ஐ.டி.ஐ நேரடி சேர்க்கை

image

தருமபுரி மாவட்டத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள காரிமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ – நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தகவல். மேலும், நவ.14-குள் மாணவர்கள் விண்ணபிக்குமாறும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99402 72267, 82203 69209, 86955 71099 ஆகிய அலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம், என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!