News April 17, 2025

பார்வைத்திறன் குறைபாடுள்ளோர் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு தொடக்கப் பள்ளியில் அந்த கல்வியாண்டிற்கு 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, அம்பேத்கர் சிலை அருகில் என்ற முகவரியிலோ,7010498011,9894945457 என்ற அலைபேசி எண்களிலோ அல்லது 04575-240458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

சிவகங்கை: வயல் வெளியில் சடலம் மீட்பு.!

image

இளையான்குடி அருகே உள்ள விரையாதகண்டன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (65) வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இளையான்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், அளவிடங்கான் பகுதியிலுள்ள வயல்காட்டு பகுதியில் செல்லத்துரை இறந்த நிலையில் கிடந்தார். மேலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 6, 2025

சிவகங்கை: டிப்ளமோ போதும்., ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை!

image

சிவகங்கை மக்களே, இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள 64 Junior Manager பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 40 வயகுட்பட்ட டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech படித்தவர்கள் டிச 17க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணபிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்யுங்க.

News December 6, 2025

சிவகங்கை: கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் ரூ.14,000

image

சிவகங்கை மாவட்டத்தில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.14,000 ரொக்கம் 3 தவணைகளில் வழங்கப்படும். இதில் பயன்பெற, தங்களது பகுதிக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை 
அணுகி விவரங்களை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி செய்தி வெளியிட்டுளளார்.

error: Content is protected !!