News May 10, 2024
பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வு

நீடாமங்கலத்தில் கிரீன் நீடா சார்பில் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு களப்பயிற்சி நடைபெறுகிறது. மூன்றாம் நாளான இன்று மாணவிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் பயிரிடும் முறை குறித்தும் கும்பகோணத்தை சேர்ந்த பசுமை எட்வின் விளக்கமளித்தார்.
Similar News
News October 22, 2025
திருவாரூர்: மழையால் இடிந்து விழுந்த 4 வீடுகள்!

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, திருவாரூர் மாவட்டாரம் பெருங்குடி கிராமத்தில் தெற்கு தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும் அதே பகுதியில் ஜெயபாரதி, சுபஸ்ரீ, செல்வமணி ஆகிய 3 பேரின் கூரை வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.
News October 21, 2025
BREAKING: திருவாரூர் நாளை விடுமுறை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக திருவாரூரில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
திருவாரூர்: மழையால் பாதிப்பா? உடனே அழையுங்கள்!

திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, வீடுகள் சேதமடைவது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!