News March 26, 2025
பாரதிராஜா மகன் மரணம் – எம்.பி இரங்கல்

இயக்குனர் இமையம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீர் மரணத்திற்கு சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தனது சார்பாகவும் தனது தொகுதி மக்களின் சார்பாகவும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 5, 2025
சிவகங்கை: அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள அதிகரை கிராமத்தில் நேற்று பயணிகளை ஏற்றாமல் வந்த டவுன் பேருந்தை, திருப்புவனத்தில் பெண்கள் மறித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து திருப்புவனம் போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் கேட்டபோது, பயணிகளின் புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
சிவகங்கை: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News November 5, 2025
சிவகங்கை விவசாயிகளே நவ.15 தான் கடைசி.!

சிவகங்கை மாவட்ட விவசாயிகள், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டப் பயன்களை பெறுவதற்கு பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை தரவு தளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வருகிற நவ-15ஆம் தேதிக்குள் விவசாயிகள் தங்களது ஆதாா் எண், 10 (1) நகல், ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலா் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


