News August 6, 2024
பாரதியார் பல்கலையில் சிறப்பு அரியர் தேர்வு

பாரதியார் பல்கலை., கீழ் ஒரு பாடத்தில் மட்டும் அரியர் உள்ள மாணவர்களுக்கு செப்.8ஆம் தேதி சிறப்பு அரியர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-20ல் ஆண்டில் எம்.எஸ்.சி., சாப்ட்வேர் சிஸ்டம்ஸ், 21-22ல் இளநிலை மாணவர்களுக்கும், 22-23 முதுநிலை மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடரும் வகையில் தேர்வு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://b-u.ac.in/ என்ற இணையத்தில் பார்க்கலாம்.
Similar News
News January 21, 2026
குழந்தை பிறந்த 2 மாதத்தில் தாய் தற்கொலை!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனப் பிரியா (34) இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது இந்த நிலையில் குழந்தையை பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த மோகனப் பிரியா நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து கவுண்டம்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 20, 2026
கோவை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

கோவை மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <
News January 20, 2026
கோவை: லஞ்சம் கேட்டாங்களா? இத பண்ணுங்க!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspcbedvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0422-2449550 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!


