News August 6, 2024

பாரதியார் பல்கலையில் சிறப்பு அரியர் தேர்வு

image

பாரதியார் பல்கலை., கீழ் ஒரு பாடத்தில் மட்டும் அரியர் உள்ள மாணவர்களுக்கு செப்.8ஆம் தேதி சிறப்பு அரியர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-20ல் ஆண்டில் எம்.எஸ்.சி., சாப்ட்வேர் சிஸ்டம்ஸ், 21-22ல் இளநிலை மாணவர்களுக்கும், 22-23 முதுநிலை மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடரும் வகையில் தேர்வு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://b-u.ac.in/ என்ற இணையத்தில் பார்க்கலாம்.

Similar News

News December 17, 2025

கோவை: செந்தில்பாலாஜிக்கு அடுத்த ஷாக்!

image

கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற திமுக பல்வேறு வியூங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், விளாங்குறிச்சியில் 70-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்து செந்தில்பாலாஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இக்கடிதம் வைரல் ஆகி வருகிறது. இது கோவை திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சில நாள்களுக்கு முன், திமுக நிர்வாகி CM-யிடம் போனில் பதவி நீக்கம் குறித்து மன வர்த்ததுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

News December 17, 2025

கோயம்புத்தூர் பெண்ணுக்கு டார்ச்சர்!

image

கோவை, கணபதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுக்கு, தினமும் ஏராளமான பொருள்கள் ‘கேஷ்ஆன் டெலிவரி’ மூலம் அப்பெண்ணின் பெயருடன் ஆபாசமான வார்த்தை சித்தரிக்கப்பட்டு தொடர்ந்து வந்துள்ளது. இதில், மன உலைச்சலில் இருந்த அப்பெண், போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில், அப்பெண்ணுடன் ஏற்கனவே வேலை பார்த்த மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளரான சதீஷ்குமார் என்பது தெரிந்தது. பின் அவரை போலீசார் கைது செய்தனர்.

News December 17, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!