News April 14, 2025
பாம்பு கடித்து 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

ஓடுகத்தூர் அடுத்த எடைத்தெரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் – செல்வி தம்பதி. இவர்களின் மகள் ஷாலினி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே செடியில் மறைந்திருந்த விஷப்பாம்பு ஒன்று மாணவியை கடித்தது. வலியால் துடித்த அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேப்பங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
வேலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்…!

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு இங்கே <
News December 1, 2025
வேலூர்: போதை மாத்திரைகளை விற்ற 5 பேர் கைது!

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வடக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்க முயன்ற சந்துரு (24), லோகேஷ் (22), விக்னேஷ் (24), சூர்யா (36), தினேஷ் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகள் 40 ஊசிகள் பறிமுதல் செய்தனர்.
News December 1, 2025
வேலூர் அஞ்சல் தலை கண்காட்சி அதிகாரிகள் தகவல்!

வேலூர் அஞ்சல் கோட்டம் சார்பாக மாவட்ட அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி வரும் டிச.12, 13 ஆகிய தேதிகளில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தண்டபாணி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இதில் அஞ்சல் தலைகள், சிறப்பு உரைகள் வெளியீடு, வினாடி வினா, கடிதம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்று பயன்பெறுமாறு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


