News April 15, 2024
பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் திறப்பு

தமிழக கடலில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஏப்.15) துவங்கியது. இதையடுத்து அனைத்து விசைப்படகுகளும், சம்பந்தப்பட்ட தங்குதளம் செல்ல பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்படுகிறது. அப்போது, மண்டபம் தென் கடல் பகுதியில் உள்ள விசைப்படகுகள் மண்டபம் வடக்கு கடல் பகுதிக்கு கொண்டு செல்லலாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
ராமநாதபுரம்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக ராமநாதபுரத்தில் 173-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <
News December 4, 2025
ராமநாதபுரம்: கையும் களவுமாக சக்கிய அரசு அதிகாரி

சாயல்குடி பகுதியில் சேர்ந்தவர் தன்னுடைய புதிய ரேஷன் கார்டு வந்ததாக மூக்கையூர் ரேஷன் கடை பணியாளர் முத்துலட்சுமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ.3500 வேண்டும் என்று கூறியதால் கொடுக்க விரும்பாத நபர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தெரிவித்தார். இந்நிலையில் ரசாயனம் தடவிய ரூ.3000 முத்துலட்சுமியிடம் கொடுக்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
News December 4, 2025
ராமநாதபுரம்: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

ராமநாதபுரம் மக்களே மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள்<


