News April 10, 2025

பாமக தலைவராக நானே தொடருவேன் ராமதாஸ் அறிவிப்பு

image

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த, மருத்துவர் ராமதாஸ் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்று கூறியுள்ளார். மேலும் அன்புமணி பாமக செயல் தலைவராக செயல்படுவார் என்றும், சட்டமன்றத்திற்கு நாடாளுமன்றத்திற்கு சென்றதில்லை,பதவி பெரும் ஆசை எனக்கு இல்லை என்றும்,2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

Similar News

News April 19, 2025

தீராத கடனும் காணாமல் போகும்

image

கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி, படையலிட்டு, வழிபட வேண்டும். இப்படி, ஒன்பது பெளர்ணமிகள் வழிபட்டு வந்தால், கடன்கள் அடைபடும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

image

விழுப்புரம் கோட்ட அளவில், ஏப்ரல் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22.04.2025 அன்று காலை 11 மணியளவில், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து விவசாய பிரதி நிதிகளும் தவறாது கலந்துகொள்ளலாம்.

News April 19, 2025

ஆண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்

image

ஆண் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது பொன்மகன் சேமிப்புத் திட்டம். இதை குறைந்தபட்சம் ₹100 முதலீட்டில் தபால் நிலையங்களில் தொடங்கலாம். இதில் வருடாந்திர வைப்பு தொகையாக குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். தற்போது 9.7% வட்டி வழங்கப்படுகிறது. 15 வருட முதிர்வு காலம் கொண்டது. இதற்கு வருமான வரி சலுகை உண்டு. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!