News April 19, 2025

பாப்பாரப்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

image

பாப்பாரப்பட்டி சொரக்காபட்டியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் 48, குடிப்பழக்கம் உடையவர். இதில் ஏற்பட்ட தகராறில் மனைவி சத்யா தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவியை மீண்டும் அழைத்தபோது வர மறுத்துவிட்டதால மனமுடைந்த அவர் கடந்த 8ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முன்றார். அவரை மீட்டு தர்மபுரி ஜிஹெச்சில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் நேற்று உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 25, 2025

தருமபுரி வழியாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து

image

பெங்களூர் எஸ்வந்த்பூர் மெஜஸ்டிக் வழித்தடத்தில் இருந்து பானாச்வடி, கார்மிலாரம், ஓசூர், தர்மபுரி செல்லும் அனைத்து ரயில்களும் 25/11/2025 இன்று ஒரு நாள் மட்டும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் Kr புரம், ஜோலார்பேட்டை, சேலம் வழியாக செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 25, 2025

தருமபுரியில் இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு

image

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. தருமபுரி மாவட்ட கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 04.12.2025 வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 25 நாட்கள் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. எனவே பள்ளி படிப்பை முடித்த 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கு பெற்று பயனடையலாம்.

News November 25, 2025

தருமபுரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

தருமபுரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <>கிளிக் செய்து<<>> கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!