News December 31, 2024
பாபநாசம் அருகே விபத்து – இருவர் உயிரிழப்பு

பாபநாசத்தை சேர்ந்த சக்திவேல் – பிரபாகரன் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது வடசருக்கை அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இரண்டு சக்கர வாகனத்தோடு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
Similar News
News December 2, 2025
தஞ்சை: மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் தோழகிரிப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் நேற்று (டிச.01) குருங்குளம் மேற்கு ஊராட்சி அற்புதபுரம் கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி வேலை செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். விரைந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 2, 2025
தஞ்சை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 04-ந்தேதி அன்று நடைபெற உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.01) இரவு 10 மணி முதல் இன்று (டிச.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


