News October 30, 2024
பாபநாசம் அணையில் 805 கன அடி நீர் திறப்பு
நெல்லை மாவட்டத்தில் நேற்று எங்கும் மழை பொழிவு இல்லாமல் வருண்ட வானிலை காணப்பட்டது. இதனிடையே, பாபநாசம் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 805 கன அடி நீர் இன்று (அக்.30) திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 95 அடியாக உள்ளது. மேலும் அணையில் நீர் வரத்து வினாடிக்கு 427 கன அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 105 அடியாக உள்ளது.
Similar News
News November 20, 2024
நெல்லை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 100 சென்டிமீட்டர் மழை
நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று(நவ.20) காலை வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் நாலு முக்கு பகுதியில் 166 மி.மீ., ஊத்து பகுதியில் 154 மி.மீ., காக்காச்சியில் 136 மி.மீ. என கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 10 மணி வரை நிலவரப்படி 100 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 20, 2024
வெள்ள தடுப்பு அறிவுரை வழங்கிய மாவட்ட நிர்வாகம்
நெல்லை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்கள் மழை நேரங்களில் டார்ச் லைட், வானொலி பெட்டி போன்றவை தயாராக வைத்திருக்க வேண்டும். குடை மற்றும் மூங்கில் கம்பு ஒன்றை வைத்திருக்க வேண்டும். முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
News November 20, 2024
நெல்லை: மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக இன்று(நவ.20) பள்ளிகளுக்கு நெல்லையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழைக்கால அவசர உதவி எண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.