News February 15, 2025
பாதாள சாக்கடையில் அடைப்பு, பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் பெருமாள் தெரு வழியாக மீன் மார்க்கெட் சாலையில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்து காணப்படும் இச்சாலையில், மீன் மார்க்கெட் எதிரில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ‛மேன்ஹோல்’ வழியாக வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதற்கு தீர்வு காண வலியுறுத்தப்படுகிறது
Similar News
News November 3, 2025
காஞ்சி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க
News November 3, 2025
காஞ்சி: ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

காஞ்சிபுரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 3, 2025
வாலாஜாபாத்-அவளூர் இடையே உயர்மட்ட பாலம்

வாலாஜாபாத் பாலாற்றின் குறுக்கே ரூ.75 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கான டெண்டர் இம்மாத இறுதியில் விடப்படவுள்ளது. டிசம்பரில் பணிகள் துவங்கும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. பாலம் 15 மீட்டர் அகலமும் 715 மீட்டர் நீளமும் கொண்டதாக உருவாக்கப்படவுள்ளது. பாலாறு வெள்ளத்தில் மூழ்கும் போது போக்குவரத்து துண்டிக்கப்படுவதால், இந்த புதிய பாலம் வாலாஜாபாத் மற்றும் அவளூர் மக்களுக்கு பயனுள்ளதாகும்.


