News March 3, 2025
பாண்லே நிறுவனத்தின் புதிய ஐஸ்கிரீம் வகைகள் அறிமுகம்

புதுச்சேரி அரசு, கூட்டுறவுத் துறையில் புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கிக் கிளைகளின் மூலம் 6 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த 70 மகளிருக்கு ரூ.83.50 இலட்சம் அளவிற்கு கடனுதவியையும் சிறந்த வங்கிக் கிளைகளுக்கு விருதுகளையும் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி பாண்லே நிறுவனத்தின் இரண்டு புதிய ஐஸ்கிரீம் வகைகளை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.
Similar News
News March 4, 2025
புதுவையில் 4,000 பேருக்கு செவித் திறன் பாதிப்பு

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கடந்த சில ஆண்டுகளாகப் புதுவை அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் செவித்திறன் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 39 ஆயிரம் பேர் பங்கேற்றதில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு செவித் திறன் பாதிப்பு (காது கேளாமை) இருப்பது கண்டறியப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
News March 4, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை குடுத்த இளைஞர் கைது

புதுச்சேரி இலாசுப்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு வில்லியனூரைச் சேர்ந்த வினோத் குமார் (22) பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், இலாசுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்துவினோத் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 3, 2025
புதுவை போஸ்ட் ஆபிசில் வேலை : இன்றே கடைசி நாள்

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். புதுச்சேரியில் மட்டும் 63 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <