News May 5, 2024
பாண்டி “ராக் பீச்” பகலில் வெறிச்சோடி

அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. புதுவையில் முதல் நாளிலேயே 100.4 டிகிரி வெயில் பதிவானது. வார இறுதி விடுமுறையை புதுவையில் கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளும் தங்கும் விடுதிகளில் முடங்கி இருந்தனர். மாலை 5 மணிக்கு பின்னரே அவர்கள் வெளியில் வரத் தொடங்கினார்கள். இதன் காரணமாக புதுவை கடற்கரை, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள், மக்கள் கூட்டம் அலைமோதியது.
Similar News
News December 10, 2025
புதுவை: போலி மருந்து விவகாரம் குறித்து விளக்கம்

புதுச்சேரி மருந்து உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், “உண்மையான மருந்து உற்பத்தியாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர் என்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே போலி மற்றும் சட்டவிரோத மருந்து உற்பத்தி தொடர்பான செயல்களில் எங்கள் சங்கத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை” என கௌரவத் தலைவர் பிரமோத், தலைவர் ரமேஷ்குமார், செயலர் சீனிவாசன், பொருளாளர் சுப்பிரமணியம் ஆகியோர் விளக்கியுள்ளனர்.
News December 10, 2025
புதுச்சேரி தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு

புதுச்சேரியில் வாக்காளர் திருத்தப்பணியின் கீழ் கணக்கெடுப்பு படிவங்கள் சமர்ப்பிக்கும் கடைசி நாள் டிசம்பர் 11-ம் தேதி என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் அறிவித்துள்ளார். அதற்குள் படிவம் சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்றும், வாக்காளர்கள் உடனடியாக BLO-விடம் படிவங்களை ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
News December 10, 2025
புதுவை: குழந்தை இறப்பு-முதல்வரிடம் கோரிக்கை!

நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், அது சம்மந்தமான விரிவான மருத்துவ ஆய்வு நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ராஜவேலு, முதல்வர் ரங்கசாமியை சட்டபேரவை அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.


