News April 14, 2024

பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை

image

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூரில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி தேர்தல் முடியும் வரை பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடலூர் பெட்ரோல் பங்குகளில் போலீஸார் சார்பில் இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Similar News

News November 16, 2025

கடலூர் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

image

கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் நித்தியா பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு மீனவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News November 16, 2025

கடலூர்: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள்,<> இங்கே க்ளிக் <<>>செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப அடிப்படை சம்பளமாக ரூ.44,500 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 30.11.2025 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.nabard.org/careers அணுகவும். SHARE!

News November 16, 2025

கடலூர்: நாய் கடித்ததால் மாணவி தற்கொலை

image

ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீமான் மகள் பிருந்தா (19). தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் தனது வீட்டிற்கு முன் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று வீட்டில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!