News April 25, 2025
பாஜக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் ஆன்மா அமைதி பெற பாஜக சார்பில் ராமநாதபுரத்தில் நேற்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மத்திய கயிறு வாரிய முன்னாள் தலைவர் குப்புராமு, மத்திய தென்னை வாரியத்தலைவர் நாகராஜன், கவுன்சிலர் குமார், சிறுபான்மை பிரிவு மாநில செயலர் தலைவர் அஜ்மல்கான், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Similar News
News April 26, 2025
முதியவரை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை

துரைப்பாண்டி(60), முத்துக்குமார்(60) இருவரும் கொரோனா காலத்தில் ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் யாசகம் வாங்கி வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 2022ல், காசை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் துரைப்பாண்டி, பீர் பாட்டிலால் தாக்கியதில் முத்துக்குமார் உயிரிழந்தார். துரைப்பாண்டிக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
News April 26, 2025
இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

இன்று (25.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, இராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். மேலும் பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட காவல் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
News April 25, 2025
429 ஊராட்சிகளில் மே.1-ல் கிராம சபை கூட்டம் – கலெக்டர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் மே.1ஆம் தேதி காலை 11 மணியளவில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சி பொது நிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு, கட்டட அனுமதி, சுய சான்றிதழ் படி கட்டட அனுமதி,வரி, வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழியில் செலுத்துதல் குறித்து விவாதிக்க மக்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.