News April 12, 2025

பாஜக மாநிலத் தலைவரானார் நயினார் நாகேந்திரன்

image

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்த நிலையில் இவருக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியது. இதன் மூலம் தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவரானார் நயினார் நாகேந்திரன். அதற்கான சான்றிதழை கட்சி அவருக்கு வழங்கியது.

Similar News

News December 16, 2025

நெல்லை: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

image

திருநெல்வேலி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News December 16, 2025

நெல்லை முன்னாள் துணை மேயர் மறைவு

image

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் அதிமுக துணை மேயரும், தற்போதைய 30வது வார்டு கவுன்சிலருமான P.ஜெகநாதன் என்ற கணேசன் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருடைய மறைவு குறித்து அதிமுக நெல்லை மாவட்ட செயலாளார் தச்சை N.கணேச ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்திற்கு தெரிவித்துள்ளனர்.

News December 16, 2025

நெல்லை: பெட்ரோல் குண்டு வீச்சு.. சிறுவர்கள் கைது

image

வி.கேபுரம் அருகே அம்பலவாணபுரம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மதன் (21) என்பவரின் விலை உயர்ந்த பைக்கை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 4 சிறுவர்கள் மற்றும் மணிகண்டன் (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சிறுவன் பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!