News August 8, 2024
பவானி நாட்டுச்சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு

பவானி அடுத்த கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஆகஸ்டு 10 (சனிக்கிழமை), பழநி – தண்டாயுபாணி (முருகன்) கோவில் நிர்வாகம் சார்பில் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. எனவே அன்று காலை 11 மணிக்கு சுற்றுவட்டார பகுதி நாட்டுச்சர்க்கரை உற்பத்தியாளர்கள், நாட்டு சர்க்கரை தரம் பிரித்து கொண்டு வந்து விற்று பயனடையலாம் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் (99445-23556) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பேரோடு, கங்காபுரம், கொங்கம்பாளையம், மொக்கையம்பாளையம், சடையம்பாளையம், கவுண்டம்பாளையம், சூரிப்பாறை, ஆலுச்சாம்பாளையம், தளவாய்பேட்டை, ஒரிச்சேரி, வைரமங்கலம், ஜம்பை, சலங்கபாளையம், பெரிய, சின்ன மோளபாளையம், திப்பிசெட்டிபாளையம், பருவாச்சி, துருசாம்பாளையம், புன்னம், எலவமலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 16, 2025
ஈரோட்டில் வசமாக சிக்கிய திருடன்!

ஈரோடு தொப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனது வீட்டின் வெளியே லாரியை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அதிகாலை 3 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, லாரியில் இருந்த பேட்டரியை சக்திவேல் என்பவர் கழட்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மடக்கிப்பிடித்து பவானிசாகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
News November 15, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.


