News March 29, 2025
பவானி ஆற்று நீர் மஞ்சள் நிறத்தில் தோற்றம்

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்று நீர் இன்று (29-03-2025) மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளித்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதி மக்களுக்கு இந்த தண்ணீரே குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த அதிகாரிகள் தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்று ஆய்வு நடத்தினர்.
Similar News
News April 6, 2025
சொத்துவரி செலுத்தினால் ரூ.5,000 ஊக்கத்தொகை

கோவை மாநகராட்சிக்கு 2025-26ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய முதலாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை முதலாம் அரையாண்டு தொடங்கிய 01.04.2025 அன்று முதல் 30.04.2025-க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு நிகர சொத்துவரி தொகையில் 5% ஊக்கத்தொகை அதிகபட்சம் ரூ.5000/- என்பதற்குட்பட்ட நேர்வுக்கேற்ப வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
News April 6, 2025
2ஆம் வகுப்பு மாணவிக்கு டி.சி! அதிர்ச்சி சம்பவம்

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு மாணவி சரியாக படிக்கவில்லை என கூறி டி.சி பெற்றுக்கொள்கிறோம் என முத்திரைதாளில் எழுதி வாங்கிய சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை மிரட்டி படிக்கவைக்க இத்தகைய செயலில் ஈடுபட்டதாக பள்ளி நிர்வாகம் கூறினாலும், இது மாணவியின் மனநிலையை பாதிக்கும் என பெற்றோர்கள் அச்சம். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News April 5, 2025
கோவை: பூங்கோல் தாயார் கோயில்

கோவையில் எழில்கொஞ்சும் கோவனூரில், பழமையான பூங்கோல் தாயார் குகைக்கோயில் உள்ளது. அழகிய மலையிடுக்குகளின் இடையில், அம்மன் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். அம்மனை தரிசிக்க செல்லும் வழியில் எல்லாம் சிறிய சிறிய நீருற்றுக்கள் என, இயற்கை நம்மை பிரம்மிக்க வைக்கிறது. குடும்பத்துடன் ஒரு நாள், இயற்கையுடன் செலவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு, பூங்கோல் தாயார் குகைக்கோயில் ஒரு வரப்பிரசாதம். SHARE பண்ணுங்க.