News April 16, 2025

பவானியில் பாலியல் தொழில் ! 

image

பவானி கூடுதுறை ரோட்டில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்தத் தகவலின் பேரில் பவானி டி.எஸ்.பி ரத்தினகுமார் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில்  தங்கி இருந்த ஐந்து நபர்கள் மற்றும் ஐந்து பெண்களை விசாரித்தனர். விசாரணையில் அங்கு பாலியல் தொழில் நடந்து வந்தது உறுதியானது. இதனைத்தொடர்ந்து விடுதியின் மேலாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

Similar News

News October 22, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்!

image

நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் குழந்தைகள் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News October 22, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

சாலையில் நடந்து செல்லும் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம். அது உங்களைச் சுற்றியுள்ள ஆபத்துக்களுக்கும், விபத்துக்களுக்கு வழிவகுக்கும். கவனக்குறைவாக நடந்து கொள்ளும்போது, வாகனங்கள், சைக்கிள்கள், மற்றும் 2 சக்கர வாகனங்கள் மீதான கவனம் சிதறலாம். செல்போனைப் பயன்படுத்துவதால், தெருக்களையும் கடக்கும்போது விபத்துக்கள் ஏற்படும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News October 22, 2025

சித்தோடு சம்பவம்: 6 தனிப்படைகள் அமைப்பு!

image

சித்தோடு – கோணவாய்க்கால்மேடு பகுதியில் கடந்த 16ஆம் தேதி நள்ளிரவில், ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியினரின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்று ஏழு நாட்கள் ஆகும் நிலையில், 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 3 சப் இன்ஸ்பெக்டர் தலைமையில், 6 தனிப்படைகள் அமைத்து மர்ம கும்பலை பிடித்து, குழந்தையை மீட்கும் பணியில் சித்தோடு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!