News August 15, 2024
பவானிசாகர் அணை திறப்பு

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரம் வழங்கக்கூடிய பவானிசாகர் அணை நிரம்பியுள்ளது. இந்நிலையில் இன்று விவசாயத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி தண்ணீரை திறந்து விட்டார். இதில் ஈரோடு தொகுதி எம்.பி பிரகாஷ் உட்பட முக்கிய பிரமுகர்களும் விவசாய சங்க பிரதிகளும் கலந்து கொண்டனர். 120 நாள் தண்ணீர் திறக்க உத்தரவு.
Similar News
News November 23, 2025
ஈரோடு: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ஈரோடு மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியபடுத்துங்க.
News November 23, 2025
ஈரோடு: பைக், கார் இருக்கா? உங்களுக்கு தான்

ஈரோடு மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News November 23, 2025
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதன்படி, ஈரோடு- 2.2 மி.மீ, கொடுமுடி – 13.6 மி.மீ, பெருந்துறை – 3 மி.மீ, சென்னிமலை – 3 மி.மீ, பவானி – 2.2 மி.மீ, கவுந்தப்பாடி – 11 மி.மீ, அம்மாபேட்டை – 10.4 மி.மீ, வரட்டுப்பள்ளம் அணை-2 மி.மீ, கோபி-6.2 மி.மீ, எலந்தகுட்டைமேடு – 16.4 மி.மீ, கொடிவேரி அணை-2 மி.மீ, குண்டேரிப்பள்ளம் அணை – 1.2 மி.மீ, சத்தியமங்கலம்- 7 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


